Saturday, 31 January 2015

☼10-விழியும் வழியும்-10☼ - ‍‍குரு பக்தி ۞தாஸோஹம் பிரபு۞


குரு உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என்று எப்படி அறிவது? இவர் உண்மையான குரு தானா? என்று பெறும்பாலோர் கேட்கின்ற கேள்வி, ஆனால் உண்மையான பக்தனுக்குரிய இலக்கணத்தை யாரும் கேட்பதில்லை காரணம் அதில் கேட்டவர் மாட்டிக் கொள்வார்!
     
       திருவண்ணாமலை திருத்தலத்தில் நமசிவாயர் என்ற மகான் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் குகையில் வாழ்ந்த படியால் அவரை அனைவரும் "குகை நமசிவாயர்" என்றே அழைத்தனர். இவா¢ன் சீடர் பெயரும் "நமசிவாயர்". குருவான குகை நமசிவாயர் சீடனான நமசிவாயா¢ன் குரு பக்தியை சோதிக்க விரும்பினார். அதன்பின் குரு தன் வாந்தியை பானையில் எடுத்து அப்பானையை சீடனிடம் கொடுத்து, "நீ என்னுடைய வாந்தியை யாரும் காலில் மிதிக்காதபடி ¡¢டத்தில் கொட்டிக்கொண்டு வா" என்று சொல்லி பானையை கொடுத்து அனுப்பி வைத்தார். குருவின் உத்திரவுபடி சீடனும் பல இடங்களில் முயன்று தேடி பார்த்தார் ஏற்ற இடம் சீடருக்கு கிட்டவில்லை. பின்பு எப்படியோ சீடனும் குரு  சொன்னார் போல செய்து முடித்து வெறும் பானையுடன் தன் குருவிடம் திரும்பினார். நான் சொன்னபடி எவ்வாறு செய்தாய் என்று குரு கேட்டார். அதற்கு சீடன் பணிவுடன் எங்கு கொட்டினாலும் பூமியில் தான் இதனை கொட்ட முடியும் கொட்டினால் மனிதர்கள் கண்டிப்பாக காலில் மிதிக்க வாய்ப்பு உண்டு. பூமியில் குழி தோண்டி இதனை கொட்டிய பின்பு மண் போட்டு மூடினாலும் கூட நாய் போன்ற விலங்குகளால் காலால் குழி பா¢த்து மிதிக்க வாய்ப்பு உண்டு. ஆதலால் நானே இந்த அமிர்தத்தை குடித்துவிட்டேன். மிதித்தாலும் என் வயிற்றைத்தான் மிதிக்க வாய்ப்பு உண்டு என்றார். இதன் மூலம் குருவின் அருளுக்கு பாத்திரமான நமசிவாயர், "குரு நமசிவாயர்" என்று குருவின் ஜீவிதம் இருக்கும் போதே தம் குருநாதரான குகை நமசிவாயரே திருநாமத்தை சூட்டினார். இந்த உண்மை சம்பவத்தின் மூலம் சீடனுக்கு¡¢ இலக்கணத்தை அறியப்பெறலாம்.
      
        ஆதனூர் என்ற கிராமத்தில் நந்தனார் என்ற கீழ் சாதியை சேர்ந்தவர் வாழ்ந்து வந்தார். அவர் தன்னுடன் பதினோரு பேர் கொண்ட கீழ் சாதியினரை திருப்புன்கூ¡¢ல் உள்ள சிவாலயத்துக்கு அழைத்துச் சென்றார். அக்கால கட்டத்தில் கீழ்சாதியினர் கோயிலுக்கு உள்ளே வர அனுமதி இல்லை என்பதால் வெளியே நின்று சிவலோகநாதா ! பொ¢ நந்தி ஒன்று உன்னை மறைத்துப் படுத்திருக்கிறது. அது எங்களுடைய பழைய வினையானது ஒன்று சேர்ந்து நந்தியாக வடிவெடுத்து உன்னை மறைக்கிறது. கோயிலுக்கு உள்ளே வராவிட்டாலும் தேரடியில் நின்று உன் தா¢சனம் கிடைத்தால் போதும். உன்னை மறைத்துப் படுத்திருக்கும் நந்தி ஓர் அடி விலகினால் போதும் உன் தா¢சனத்தைப் பெறலாம் என்று நந்தனார் வேண்ட நந்தி விலகியது. சிவனின் திருக்காட்சியும் கிட்டியது. பின்பு திருப்புன்கூர் ஆலயத்தின் பின்புறத்தில் குளம் வெட்டும் திருப்பணியில் ஈடுபட்டு ஊர் திரும்பலாயினர். அங்கு நந்தனார் ஊர்மக்களிடன் சிவன்பால் பக்தியை செலுத்த சொன்னார். மேலும் தில்லை அம்பலத்தின் மகிமைகளை எடுத்து உரைத்ததன் பலன் நந்தனார்க்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி ஊர்ப்பொ¢யவரை அறிவுரை கூற அழைத்தார்கள் பொ¢யவர் அவ்வாறே அறிவுரை கூற நந்தனார் ஏது நிலையில்லாதது நிலையானது என்று எடுத்துரைத்தார். அக்கணமே பொ¢யவர் நந்தனார் காலில் விழுந்து வணங்கினார். பின்பு, அப்பொ¢யவர் பன்னிரெண்டாவது பக்தராக மாறிவிட்டார். அவ்வூ¡¢ல் தினமும் பஜனை முதலிய சிவ சம்பந்தமான பல வழிபாட்டு முறைகள் நடைப்பெறலாயிற்று. நந்தனார் அந்தணா¢டம் சிதம்பரத்தைக் கண்டால் பிறவிப்பிணி போகும் எனக்கு சிதம்பரத்தை காண அனுமதி தாருங்கள் என்று கேட்டதற்கு அந்தணர், "சிதம்பர தா¢சனம் சித்தர்களுக்கே சாத்தியம். உனக்கு அது சாத்தியமில்லை. யோகிகளும் தவசிகளும் தேடிக் கண்டறியாச் சிவபதத்தை உன்னால் சேவிக்க இயலுமா? போய் உன் வேலையை பாரடா! "சிதம்பரம் சிதம்பரம்" என்று பித்துப் பிடித்து அலையாமல் வேலையைப்பாரடா! என்று வேதியர் அதட்டிவிட்டார். பின்பு நாற்பது வேலி பூமியில் பயிரை நட்டாக வேண்டும், அது விளைந்து அதனை நீ காப்பாற்றியாக வேண்டும். விளைச்சலை எடுத்து கொட்டத்திற்கு எடுத்து சேர்த்தாக வேண்டும் என்றார். பின்பு நீ சிதம்பரத்துக்கு போகலாம் என்றார். அதன்படி நந்தனார், ஏர் உழுதுக்கொண்டே நடராஜா ! நடராஜா ! தில்லை நடராஜா !!! திருச்சிற்றம்பலம் காண்போம் என்று சிவனின் திருநாமத்தை கூறிக்கொண்டு காளைமாடுகளே ! நான் தில்லை போக உதவுங்கள் மார்கழித் திங்கள் திருவாதிரை வரப்போகிறது அப்போது சிதம்பரத்தில் உள்ள அம்பலவானனை நான் சேவிக்க வேண்டும் என்று கூறியபடி வயலை உழுதாக்கி விட்டார். அப்போது மாட்டு வண்டியில் சிதம்பர நாதரை காண ஒரு குடும்பம் பயணித்து அவ்வழியில் சென்றது. நந்தனார் அவர்களைப் பார்த்து நான் மார்கழித் திங்கள் திருவாதிரையில் சிதம்பர நாதரை சந்திக்கிறேன் என்று கூறுங்கள் என்றார். ஒரே நாளில் நாற்பது வேலி உழவு நடுவது யாரால் இயலும் என்று அந்தணர் கேட்க, சிதம்பரநாதருடைய
திருவிளையாடல் அய்யா இது ! நான் ஒன்றும் செய்யவில்லை. சிதம்பரம் சென்று தில்லை நாதருடைய தா¢சனம் பெறவேண்டும். தில்லையை நான் ஒரு நாளும் மறக்க முடியாது. தில்லை போக தடை போடாதீர்கள். தடை போட்டால் என் உயிர் போய்விடும் என்று கூற, என்ன பிதற்றுகிறாய் ! உனக்கு சவுக்கடி விழும் என்று நந்தனாரை மிரட்ட, அப்படியே செய்யுங்கள் என்றார் நந்தனார். பின்பு கோபமாக அந்தணர், நெல் விளையாது சிதம்பரம் போக முடியாது என்று கூறியபடியே வில்வ மரத்தில் நந்தனாரை கட்டி சவுக்கில் அடிக்கும் போது நந்தனார், " அடியுங்கள் சுவாமி ! நன்றாக அடியுங்கள். உடல் செய்த பாவத்துக்கு உடல் அடிவாங்கட்டும். என் உள்ளமோ சிதம்பரத்துக்கு போய்விட்டது. தில்லை நாதரை கண்டு ஆனத்திக்கிறது. சிவாய நமஓம் ! ஓம் நமசிவாய !! என்று சிவ நாமத்தை ஜெபிக்க ஆரம்பித்திவிட்டார். பின்பு, அந்தணர் வீட்டிற்குச் சென்று உறங்கலானார். அப்போது நந்தனார் சிதம்பரநாதா¢ன் நினைவில் மூழ்கியவராய் இருக்கையில், சிவபெருமான் நந்தனார் கனவில் தோன்றி உன் பாபம் தீர்ந்துவிட்டது, விரைவில் தில்லை வருவாய். இந்த ஜென்மத்தின் பயனை அடையப்பெறுவாய் ! பூமியில் நெல் விளைந்து அந்தணர் வீட்டில் மூட்டை மூட்டையாக குவிந்து விட்டது. அந்தணரே வந்து உனக்கு அனுமதி தருவார். பின்பு உன் அடியார்களுடன் நீ தில்லை வருவாய். தில்லைவாழ் அந்தணர்கள் உன்னை பூரண கும்பத்துடன் உள்ளே உன்னை தா¢சிக்க அழைப்பார்கள். அவர்கள் ஞானாக்னியை மூட்டுவார்கள், அதில் அக்ஞான சா£ரத்தை அழித்துவிட்டு ஞான சா£ரத்துடன் என்னுடன் கலந்துவிடுவாய்.

        பின்பு சிவபெருமான் அந்தணர் கனவில் தோன்றி என் பக்தன் நந்தன் சதா காலமும் என் நினைவில் இருப்பவன், நீ விரும்பும் போகப்பொருள் நெல் மூட்டையாக உன் வீட்டு கட்டுத்தரையில் குவிந்து விட்டது. நந்தனார் இருக்குமிடத்தில் விரைந்துச் சென்று தில்லை வர விரைவில் அனுமதியளித்து அனுப்பிவை. பக்தனுக்குச் செய்யும் துன்பம் எனக்கு செய்யும் துன்பம் ஆகும். பக்தனை அடித்தாய் அல்லவா ? அந்த அடியின் தழும்பை என் முதுகில் பார் என்றார். அதன்படி அந்தணர் நந்தனா¡¢டம் சென்று தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு நந்தனா¡¢ன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு சிறியேனாகிய நான் செய்த பிழையை சிவ பக்தராகிய நீர் பொறுத்தருள வேண்டும் என்று கூறி, " இட்டார் பொ¢யோர் " என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்ந்தேன் என்றார். பின்பு அடியாருடன் நந்தனார் கையில் வீணையுடன் " ஓம் நமசிவாய " என்று சிவ நாமத்தை கூறிக் கொண்டு தில்லையைச் சுற்றிவந்து தெற்கு குளக்கறையை அடைந்தார்.

        அங்கு பன்னிரெண்டு தில்லைவாழ் அந்தணர் கனவில் சிவபெருமான் தோன்றி என் பக்தன் நந்தன் " திருநாளைப் போவேன் , திருநாளைப் போவேன் " என்று ஓயாது சொல்லிக் கொண்டிருந்ததால் "திருநாளைப் போவார் " என்று பெயரும் பெற்றுள்ளான். என்னைக் காண உள்ளே வராமல் கீழ்சாதி என்று பயந்து கோயிலுக்குள் வராது தெற்கு குளக்கரையில் துடியாய் தன் அடியாருடன் துடித்துக்கொண்டு இருக்கிறார், அவரை மா¢யாதையுடன் பக்தி சிரத்தையுடன் அழைத்து ஆலையத்துக்கு முன் அக்னியை மூட்ட வேண்டும், அதில் அவர் பிரவேசம் செய்வார். அக்னியில் பிரவேசம் செய்யும் நந்தனார் வடிவில் நடராஜ மூர்த்தி தாமே காட்சி தருவேன், என்று கூறி உத்தரவிட்டுச் சென்றார்.
        அதன்படி நந்தனா¡¢டம் நடந்ததைக் கூறி தில்லை வாழ் அந்தணர்கள் காலில் விழுந்து வணங்கி தில்லை நடராஜா¢ன் உத்தரவுபடி அக்னியை மூட்டினார்கள். அப்போது நந்தனார் ஹரஹர மகாதேவா ! சம்போ சதாசிவா ! என்று கூறியபடியே பரமானந்தத்தை உணர்ந்தபடியே "யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுவதாகுக " என்று கூறினார். பஞ்ச பூதத்தால் ஆன உடலை பஞ்ச பூதங்களுள் ஒன்றாகிய அக்னிக்குக் கொடுக்கிறேன். இனி பரமனுக்கு¡¢ உடல் வந்தமைவதாகுக. அக்னியில் இடும்பொருள் தூய்மையடைகிறது. இந்த பூத உடலைத் தூய்மைப் படுத்துவது அக்னிக்கே சாத்தியம், இவ்வாறு கூறிக்கொண்டு நந்தனார் அக்னியை வலம் வந்து கைகூப்பி வணங்கி அக்னியில் புகுந்து ஆனந்தமாக வெளியே வர அப்போது அனைவரும் நந்தனார் காலில் விழுந்து வணங்கி துதி செய்தனர்.

       நந்தனார் சிவனை வணங்கியதால் சிவ சாயுஜ்யம் பெற்றார், காரணம் நந்தனார் சிவனுக்கு பக்தனானார், பின்பு ஊர் மக்கள் நந்தனாருக்கு பக்தனானார்கள். இதுவே பக்தனின் சிறந்த பெருமையை எடுத்துரைக்கிறது.

    பக்தனின் மாண்பை ஒரு உபமான கதையின் மூலம் விளக்குகிறேன்.     
      தாய் ஒருத்தி கொள்ளி கட்டையை எரித்து தண்ணீரை கொதி படுத்திக் கொண்டு இருக்கிறாள். அச்சமயம் பார்த்து அவளது மகன் மண்ணெண்ணை ஊற்றுவேன் என்று விளையாட்டுத்தனமாக நெருப்பினுள்ளே ஊற்ற முற்படுகிறான். இதனால் நிகழவிருக்கும் ஆபத்தை புரிந்துத் கொண்ட தாய் ஊற்றாதே என்று மறுப்பு தெரிவித்துக் கொண்டே வெப்ப படுத்திய கொள்ளிக்கட்டையை எடுத்து அவன் முன் காட்டுகிறாள். இதில் அவன் மனம் கலங்கவில்லை , பயப்படவில்லை , காரணம் கட்டையில் தான் நெருப்பு இருக்கிறது ஆனால் தாய் பாசத்தில்  குளிர் இருக்கிறது! இதில் கொள்ளிக்கட்டையில் இருந்த தனல் சூட்டைத்தான் உணர்ந்தான். அவன் தாய் கட்டையை காண்பித்தாலும் காண்பிக்காட்டியும் அடுப்பில் இருக்கும்போது கூட அதே தனல் சூட்டை தான் உணர்ந்து இருக்க முடியும். இதேப்போல் தான் பக்தனுக்கு வரும் துன்பம், அவன் மனம் ஒரு சஞ்சலத்தையும் ஏற்படுத்தாது. மனதை எந்த காரணத்தைக் கொண்டும் சஞ்சலமாக விடக்கூடாது என்பது தான் ஆனந்தத்துக்கு முதல் படி.

இப்போது நாம் குரு அடைந்த நிலையை பார்ப்போம்.

      " ஒருவரைப் பார்த்தவுடன் அவர் உயர்ந்த நிலையை எய்தியுள்ளார் என்று எப்படி அறிவது?" என்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் குரு தாரக் மஹராஜ் என்கிற ஸ்ரீ மஹாபுருஷ மகராஜ் அவர்களிடம் கேட்டபோது "உனது மனம் அவரது சன்னதியில் எப்படி இருக்கின்றது என்று பார். உள்ளத்தே ஆனந்தமும், அமைதியும் குடிகொண்டால் அவர் பெரிய மூர்த்தி என்று உணரலாம்" என்றார்.

☼09-விழியும் வழியும்-09☼ - அ+உ+ம்="ஓம்" ‍‍۞தாஸோஹம் பிரபு۞


உலகமே அதிர்வான ஒலியின் மூலம் இயங்கிக்கொண்டு இருக்கிறது அதனால் தான் இறைவனே நாத பிரம்மம் எனப்படுகிறான். ++ம் என்பதே "ஓம்" அதிர்வு இந்த ஒலி பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கிறது. அதனால் தான் இறை தன்மை பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. '' என்னும் எழுத்து படைக்கும் கடவுளான பிரம்மனையும், '' என்னும் எழுத்து காக்கும் கடவுளான விஷ்ணுவையும், 'ம்' என்னும் எழுத்து அழிக்கும் கடவுளான ருத்திரனையும் குறிக்கிறது.

            ஓங்காரத் துள்ளே உதித்த ஐம்பூதங்கள்
            ஓங்காரத் துள்ளே உதித்த சராசம்
            ஓங்கார தீதத்துயிர் மூன்றும் உற்றன
            ஓங்கார சீவ பரசிவ ரூபமே
                                                            _ திருமூலர்

        விதவிதமான ஒலிகளை பல்வேறு இடங்களில் கேட்டாலும் அவை அனைத்தும் "ஓம்" ஒலி கலந்த ஓசைகள்தான். "ஓம்" பிரணவ மந்திரத்தின் அக்ஷரத்தை சரியாக உச்சரிப்பதன் மூலம் பிரபஞ்சத்துடன் ஒன்றி இயங்க இயற்கை வழிவகுக்கிறது. நாம் 'ஓம்" என்று முறையாக சொல்லும்போது வாய்யை எவ்வாறு அசைக்கிறோமோ அவ்வாறே பிரபஞ்சம் இறைகையாக அவ்வசைவின்படிதான் இயங்குகிறது.

             அகார காரணத்திலே அநேக ரூபமாய்
             உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன்
             மகார காரணத்திலே தெளிந்தது சிவாயமே.
                                                                  _ சிவவாக்கியர்

       எந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பும் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தை முதலில் சொன்னால் பிரபஞ்சத்துடன் நாம் இயற்கையாகவே இணைய வாய்ப்பாக அமையும். மந்திரம் சொல்லி முடிந்தான பிறகு ஓம் சாந்தி சாந்தி சாந்தி : (ஆதி ஆத்மீகம், ஆதி பெளதீகம், ஆதி தெய்வீகம்) என்று சொல்வதன் மூலம் துஷ்ட அதிர்வுகள் நம்மை தாக்காத படி ஒத்து போக வாய்ப்பு ஏதுவாக அமைகிறது. அப்படி சொல்லாமல் விடுவது மந்திரத்தின் நிறைவு இல்லை நிறைவு பெறாத மந்திரத்துடன் அடுத்து நாம் செய்ய போகும் உலக விஷியங்களைப் பற்றிக்கொண்டு வேறு ஏதோ கெடுதல் (பலன்) உண்டாக்கிவிடும்.

      "மந்திரம்" என்றால் மனதின் திரம். மனதை ஒருமுகப்படுத்தி நம்பிக்கையுடன் மந்திரத்தை பல எண்ணிக்கையில் உச்சரிப்பதன் மூலம் நினைத்ததை அடையமுடியும். 51 ஸம்ஸ்க்ருத்தின் அக்ஷரங்கள் தேவியின் உடல் பாகமாக அமைவதால் பல விதத்தில் சக்தி பெற வழிவகுக்கிறது. அக்ஷரம் என்றால் அழிவற்றது என்று பொருள். அக்ஷரத்தை சரியில்லாமல் உச்சரிப்பதால் அழிவு (க்ஷரம்) தானாக வந்து அமைகிறது. மனதில் பொறுமையாக அக்ஷரத்தை நினைத்து சரியான பதத்தில் சொன்னால் இதன்மூலம் நமக்கு மந்திர காப்பை அமைத்துக்கொள்ள முடியும்.

             அகாரம் உகாரம் அகங்காரம் புத்தி
             மகாரம் மனம் சித்தம் விந்துப் - பகாது
             நாதம் உள் வடிவாம் நாடில் பிரணவமாம்
                                                            - சிவஞான போதம்

      ஓங்காரம் என்பது தான் பிரணவம். அகர, உகர, மகர எழுத்துக்கள் சேர்ந்த ஒலி "'ஓம்". இந்த பிரபஞ்சத்தில் அகரம் தோற்றத்துக்கும், உகரம் இருப்புக்கும், மகரம் ஒடுக்கத்துக்கும் அண்டத்தில் எங்கும் இடையறாது ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

Tuesday, 27 January 2015

☼08-விழியும் வழியும்-08☼ - பிராணாயாமம் ‍‍۞தாஸோஹம் பிரபு۞

         யோகத்தில் எட்டு வகை இருக்கிறது அவையே அஷ்டாங்க யோகம். இதில் இயமம், நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதி.

        இப்போது தியானம், பிராணாயாமத்தின் சக்தி வாய்ந்த செய்யும் நுட்ப முறையை பார்ப்போம்.

         தியானம் செய்யும் போது கண்களை மூடிக்கொள்ள முடியும் என்பதால் கண்களை மூடிக்கொள்கிறோம். ஏனைய உருப்புகளை உருப்புகளால் மூடிக்கொள்ள முடியாததால் அதனை முழுதும் மட்டுப்படுத்தவேண்டும். இந்த இயல்பான நிலை மூலம் தன்னை உணரவும் மற்றும் தன்னை உண்மை நிலையில் நிருத்திக்கொள்ளவும் தியானம் ஏதுவாக வந்து அமைகிறது.

         முதலில் திருநீரை இட்டுக்கொள்ளவும், பின் தீபமேற்றி வைக்கவும், அடுத்த படியாக வெறும் தரையில் உட்காராமல் ஏதோ ஒரு விரிப்பை பயன்படுத்தி உட்கார வேண்டும். பின் கையை ஏந்தியபடி காலில் வைக்கவும் (கையில் திருவோடு, வில்வங்காய் அல்லது வாழைப்பூவின் செவ்வோடு இருந்தால் நல்லது).பின்பு முதுகு தண்டு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். தலையை மிக சிறிதளவு மேலே தூக்கவும். அப்போது ஆத்ம ஆனந்த ஜோதி பிரகாசமாக இருப்பதாக புருவ மத்தியில் பாவித்துக் கொண்டு "ஓம் தத் சத்" என்பதை நாக்கு அசையாமல் மெதுவாக எண்ண வேண்டும். அல்லது தலையை மிக சிறிதளவு கீழே சாய்க்கவும். அப்போது ஆத்ம ஆனந்த ஜோதி பிரகாசமாக இருப்பதாக ஹிருதயத்தில் (நெஞ்சுக் குழியில் இரண்டு விரற்கடைக்கு வலது புறம்) பாவித்துக் கொண்டு "ஓம் தத் சத்" என்பதை நாக்கு அசையாமல் மெதுவாக எண்ண வேண்டும். இறுதியாக அதீத நிலைக்குச் செல்ல வேண்டும்.

         மூலாதாரம் (gonads) என்னும் சக்கரத்தில் 6 மணி முதல் 6.40 மணி வரை 600 சுவாசமும் சுவாதிஸ்டானத்தில் (prostract glands) 6.40 மணி முதல் 13.20 மணி வரை 6000 சுவாசமும், மணிபூரகத்தில் (adrenal glands) 13.20 மணி முதல் 20.00 மணி வரை 6000 சுவாசமும் , அனாகதத்தில் (pancreas) 20.00 மணி முதல் 2.40 மணி வரை 6000 சுவாசமும் விசுத்தியில் (thyroid glands) 2.40 மணி முதல் 3.47 மணி வரை 1000 சுவாசமும் ஆக்கினையில் (pitutary glands) 3.47 மணி முதல் 4.53 மணி வரை 1000 சுவாசமும் சகசிராரமில் (peneal gland) 4.53 மணி முதல் 6.00 மணி வரை 1000 என்ற விதத்தில் நமது உடலில் ஒரு நாளைக்கு 21,600 சுவாசங்கள் நடைபெறுகிறது. அதில் 14,400 சுவாசங்களைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். மீதியுள்ள 7,200 சுவாசங்களை வீணாக்குகிறோம். இதனால் தான் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 72,000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன். இது மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன என்பதை குறிக்கிறது. இதில் மூலவர் கருவரை, இதயம் நமக்கு இடது பக்கம் இருக்கிறது போல கோயிலில் சற்று தள்ளி இடதுபக்கம் இருக்கிறது, அம்பலத்தானின் திருநடனமே இதயத்துடிப்பு. கோயிலில் உள்ள ஐந்து பிரகாரங்கள் நமது உடலில் உள்ள பஞ்ச கோசங்களை குறிக்கிறது. இக்கோயில் உலகத்தில் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. சரப்பயிற்சியின் மூலம் வீணாகும் சுவாசத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

"ஓம் நமசிவாய சிவாயநம ஓம்" என்ற எண்ணத்தின் மூலம் 12 அங்குல காற்றை உள்ளே இழுக்கவும்.
"ஓம் தத் சத் ஓம்" என்ற எண்ணத்தின் மூலம் 4 அங்குல காற்றை நாசம் செய்ய வேண்டும்.
"ஹரி ஓம் நமோ பகவதே நாராயணாய நம" என்ற எண்ணத்தின் மூலம் 16 அங்குல காற்றை வெளியே விட வேண்டும்.

        பிராணாயாமம் பயிற்சி சில விதிமுறையுடன் கண்டிப்பாக தக்க குரு மூலமாய் தெரிந்து செய்ய வேண்டும். இக்கால கட்டத்தில் குரு கிடைக்க பெறாதவர்கள் இம்முறையை பயன்படுத்தலாம்.
முதலில் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்க வேண்டும், வலது பக்கம் மூக்கை கட்டை விரலால் அடைக்க வேண்டும். அப்படி இழுத்த காற்றை லேசாக இடதுபக்கம் விடவேண்டும். பின்பு இடது பக்கம் மூக்கை நடு விரலில் அடைத்து வலது பக்கம் காற்றை உள்ளே இழுத்து அப்படி இழுத்த காற்றை லேசாக வலது பக்கமே விடவேண்டும். இது ஒரு சுற்று. முதல் வாரம் ஒரு முறை, இரண்டாம் வாரம் இரண்டு முறை, மூன்றாம் வாரம் மூன்று முறை, நான்காம் வாரம் நான்கு முறை என்ற விதத்தில் செய்ய வேண்டும். இதற்கு மேலே அதிகமாக செய்தால் உடல் நிலை கெட்டுவிடும். சரப்பயிற்சியின் சாரம் இதுவே.

        உடலின் மூல ஆற்றல் உடலெங்கும் 72,000 நாடிகள் வழியாக பரவுவதாக சித்தர்கள் கண்டு கூறியுள்ளனர். தவறாக பிராணாயாமம் செய்தால் இதன் செயல்பாடு மாறிவிடும். வேறு உபாயம் என்னவென்று பார்த்தால் அக்கால கோயிலுக்குச் சென்று கருவரையில் உள்ள மூர்த்தியை வணங்கும் போதும் பிரகாரங்களில் (பஞ்ச கோசங்கள்) உள்ள ஏனைய மூர்த்தியை வணங்குவதற்கு செல்லும் போதும் கோயிலுக்குள் உள்ளே செல்லும் போதே மூல கடவுளின் திருநாமத்தை மட்டும் மனதில் நினைத்துக்கொண்டு தண்ணீர் குடத்தை எடுத்து பொறுமையாக நடக்கும் நிரைமாத கற்பினியைப் போல் பொறுமையாக நடப்பதால் இயற்கையாக பிராணாயாமம் நடக்கும். அப்போது வேறு ஏதோ உலக சிந்தனையும் மற்றவர்கள் பேசும் வார்த்தைகளை ஒட்டு கேட்கும் அல்ப்ப புத்தியோடும் கூட வருபவர்களிடமும் செல்போனில் பேசிக் கொண்டும் விரைவாக செல்வதனால் உங்கள் உடம்பில் பிராணாயாமம் தவறாக நடந்து பல பாதிப்புகள் விரைவில் நடக்க வாய்ப்பாக அமையும். கோயிலுக்கு சென்றால் அமைதியும் ஆனந்தமும் ஏற்படுத்தி பல மடங்கு அமைதியும் ஆனந்தத்தையும் பெற முயல வேண்டும். அங்கு குறை காண்பதும் மற்றவர்களுக்கு இடஞ்சல் பண்ணுவதும் அசுத்தம் செய்வது  போன்றதை விட்டு தன் ஆன்ம பலத்தை கூட்டிக் கொள்ள வேண்டும்.

        சிவபெருமானுக்குரிய தலங்களில் ஆறு ஆதாரங்களுக்கு உரிய ஐம்பூதங்களுக்கு உரிய தனித்தனி தலங்கள் உண்டு.
மூலாதாரம் : திருவாவினன் குடி
சுவாதிஸ்டானம் : திருவானைக்காவல் (நீர்)
மணிப்பூரகம் : திருவண்ணாமலை (அக்னி)
அனாகதம் : சிதம்பரம் (ஆகாசம்)
விசுத்தி : காளஹஸ்தி (காற்று)
         காஞ்சி (நிலம்)
ஆக்கினை : காசி
ஆனால் வெள்ளிங்கிரிப் பெருமான் "பஞ்சலிங்கேஸ்வரர்"